Senthamil.Org

சுரும்பு

தேவாரம்

சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு 
துன்னிய தழல்நாகம் 
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல 
கொண்டடி யவர்போற்றக் 
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் 
துறைதரு கற்பகத்தை 
விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் 
விதியுடை யவர்தாமே.
சுரும்பு எனத்தொடங்கும் தேவாரம்