Senthamil.Org

சுடர்ப்பவளத்

தேவாரம்

சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை
விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலத் தானம் 
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சுடர்ப்பவளத் எனத்தொடங்கும் தேவாரம்