Senthamil.Org

சீரால்

தேவாரம்

சீரால் வணங்கப் படுவார் தாமே
திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே
ஆரா வமுதமு மானார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
நீரார் நியம முடையார் தாமே
நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.
சீரால் எனத்தொடங்கும் தேவாரம்