Senthamil.Org

சீரார்

தேவாரம்

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்புஜளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல 
ஆராத் தராய்பிரம னுர்புகலி வெங்குருவோ டந்தண் காழி 
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி 
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னுரே.
சீரார் புனற்கெடில வீரட்டமுந்
திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும் 
பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
காரார் கமழ்கொன்றைத் தாரார்க்கென்றுங்
கடவுஜரில் வீரட்டங் காப்புக்களே.
சீரார் முடிபத் துடையான் றன்னைத் 
தேசழியத் திருவிரலாற் சிதைய நுக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப்
பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்
போரார் புரங்கள் புரள நுறும் 
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை
ஆரானை ஆரூரி லம்மான் றன்னை
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சீரார் எனத்தொடங்கும் தேவாரம்