Senthamil.Org

சீரணி

தேவாரம்

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் 
திரிபுர மெரிசெய்த செல்வர் 
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் 
மான்மறி யேந்திய மைந்தர் 
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் 
கண்ணுதல் விண்ணவ ரேத்தும் 
பாரணி திகழ்தரு நான்மறை யாளர் 
பாம்புர நன்னக ராரே.
சீரணி எனத்தொடங்கும் தேவாரம்