Senthamil.Org

சிவனெனும்

தேவாரம்

சிவனெனும் நாமந் தனக்கே 
யுடையசெம் மேனியெம்மான் 
அவனெனை ஆட்கொண் டளித்திடு 
மாகில் அவன்றனையான் 
பவனெனு நாமம் பிடித்துத் 
திரிந்துபன் னாளழைத்தால் 
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி 
யானென் றெதிர்ப்படுமே.
சிவனெனும் எனத்தொடங்கும் தேவாரம்