Senthamil.Org

சிவனெனு

தேவாரம்

சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் 
றிருநின்ற செம்மை யுளதே 
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ 
ததன்மேலொ ராட லரவங் 
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில் 
கலனாவ தோடு கருதில் 
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு 
மகநேர்வர் தேவ ரவரே.
சிவனெனு எனத்தொடங்கும் தேவாரம்