Senthamil.Org

சிலைதனை

தேவாரம்

சிலைதனை நடுவிடை நிறுவியொர் 
சினமலி அரவது கொடுதிவி 
தலமலி சுரரசு ரர்களொலி 
சலசல கடல்கடை வுழிமிகு 
கொலைமலி விடமெழ அவருடல் 
குலைதர வதுநுகர் பவனெழில் 
மலைமலி மதில்புடை தழுவிய 
மறைவனம் அமர்தரு பரமனே.
சிலைதனை எனத்தொடங்கும் தேவாரம்