Senthamil.Org

சிரமேற்ற

தேவாரம்

சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத் 
திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன் 
ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி
நரையேற்ற விடையேறி நாகம் புஜண்ட 
நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சிரமேற்ற எனத்தொடங்கும் தேவாரம்