Senthamil.Org

சினந்திருத்துஞ்

தேவாரம்

சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள் 
செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் 
பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்
தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சினந்திருத்துஞ் எனத்தொடங்கும் தேவாரம்