Senthamil.Org

சிந்தையாய்

தேவாரம்

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
சிந்தையாய் எனத்தொடங்கும் தேவாரம்