Senthamil.Org

சாலக்

தேவாரம்

சாலக் கோயில் உளநின் கோயில் 
அவையென் றலைமேற் கொண்டாடி 
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் 
வானோர் அறியா நெறியானே 
கோலக் கோயில் குறையாக் கோயில் 
குளிர்புஜங் கச்சூர் வடபாலை 
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் 
அறங்கட் டுரைத்த அம்மானே.
சாலக் எனத்தொடங்கும் தேவாரம்