Senthamil.Org

கொல்லும்

தேவாரம்

கொல்லும் மூவிலை வேலுடை யானைக் 
 கொடிய காலனை யுங்குமைத் தானை 
நல்ல வாநெறி காட்டுவிப் பானை 
 நாளும் நாம்உகக் கின்ற பிரானை 
அல்ல லில்லரு ளேபுரி வானை 
 ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க் 
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் 
 கூறி நாம்பணி யாவிட லாமே.
கொல்லும் எனத்தொடங்கும் தேவாரம்