Senthamil.Org

கொலைவரி

தேவாரம்

கொலைவரி வேங்கை அதளுங் 
குலவோ டிலங்குபொற் றோடும் 
விலைபெறு சங்கக் குழையும் 
விலையில் கபாலக் கலனும் 
மலைமகள் கைக்கொண்ட மார்பும் 
மணியார்ந் திலங்கு மிடறும் 
உலவு கெடிலப் புனலும் 
உடையா ரொருவர் தமர்நாம் 
அஞ்சுவ தியாதொன்று மில்லை 
அஞ்ச வருவது மில்லை.
கொலைவரி எனத்தொடங்கும் தேவாரம்