Senthamil.Org

கொலைக்கணித்

தேவாரம்

கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார் 
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின் 
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம் 
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம் 
மலைக்கணித் தாவர வன்றிரை முரல 
மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக் 
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
கொலைக்கணித் எனத்தொடங்கும் தேவாரம்