Senthamil.Org

கொய்மலர்க்

தேவாரம்

கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி 
மத்தமுங் கூவிளமும் 
மெய்மலர் வேய்ந்த விரிசடைக் 
கற்றைவிண் ணோர்பெருமான் 
மைமலர் நீல நிறங்கருங் 
கண்ணியோர் பால்மகிழ்ந்தான் 
நின்மல னாடல் நிலயநெய்த் 
தானத் திருந்தவனே.
கொய்மலர்க் எனத்தொடங்கும் தேவாரம்