Senthamil.Org

கொன்றையங்

தேவாரம்

கொன்றையங் கூவிள மாலை தன்னைக் 
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி 
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ 
அருவரையைக் காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.
கொன்றையங் எனத்தொடங்கும் தேவாரம்