Senthamil.Org

கொத்தலர்

தேவாரம்

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு 
குணமாய வேட விகிர்தன் 
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் 
திருநீறு செம்மை திடமே 
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
கொத்தலர் எனத்தொடங்கும் தேவாரம்