Senthamil.Org

கொண்டலார்

தேவாரம்

கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே.
கொண்டலார் எனத்தொடங்கும் தேவாரம்