Senthamil.Org

கொண்டதோர்

தேவாரம்

கொண்டதோர் கோல மாகிக் 
கோலக்கா வுடைய கூத்தன் 
உண்டதோர் நஞ்ச மாகில் 
உலகெலாம் உய்ய உண்டான் 
எண்டிசை யோரும் ஏத்த 
நின்றஏ கம்பன் றன்னைக் 
கண்டுநான் அடிமை செய்வான் 
கருதியே திரிகின் றேனே.
கொண்டதோர் எனத்தொடங்கும் தேவாரம்