Senthamil.Org

கொடியேயும்

தேவாரம்

கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
குறட்புஜதங் கூத்தாட நீயு மாடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப் 
பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
கொடியேயும் எனத்தொடங்கும் தேவாரம்