Senthamil.Org

கொடியுடை

தேவாரம்

கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத்
துடியிடை யாளையோர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.
கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம் 
வில்லா நாணியிற் கோலொன்றினால் 
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில் 
உமக்கார் எதிரெம் பெருமான் 
கடிபடு புஜங்கணை யான்கருப் புச்சிலைக் 
காமனை வேவக் கடைக்கண்ணினாற் 
பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ 
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
கொடியுடை எனத்தொடங்கும் தேவாரம்