Senthamil.Org

கொங்கியல்

தேவாரம்

கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு
பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.
கொங்கியல் புஜங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.
கொங்கியல் எனத்தொடங்கும் தேவாரம்