Senthamil.Org

கொங்கணை

தேவாரம்

கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படுமிடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் இடம்வலம் புரமே.
கொங்கணை வண்டரற் றக்குயி 
 லும்மயி லும்பயிலுந் 
தெங்கணை புஜம்பொழில் சூழ்திரு 
 நாகேச் சரத்தானை 
வங்கம் மலிகடல் சூழ்வயல் 
 நாவலா ரூரன்சொன்ன 
பங்கமில் பாடல்வல் லாரவர் 
 தம்வினை பற்றறுமே.
கொங்கணை எனத்தொடங்கும் தேவாரம்