Senthamil.Org

கொக்கிற

தேவாரம்

கொக்கிற கோடு கூவிள மத்தங் 
கொன்றையொ டெருக்கணி சடையர் 
அக்கினொ டாமை புஜண்டழ காக 
அனலது ஆடுமெம் மடிகள் 
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் 
விண்ணவர் விரைமலர் தூவப் 
பக்கம்பல் புஜதம் பாடிட வருவார் 
பாம்புர நன்னக ராரே.
கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே.
கொக்கிற எனத்தொடங்கும் தேவாரம்