Senthamil.Org

கையாற்

தேவாரம்

கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.
கையாற் கயிலை யெடுத்தான் றன்னைக் கால்விரலாற் றோள்நெரிய வுஜன்றி னான்காண் மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு மீண்டே அவற்கருள்கள் நல்கி னான்காண் பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண் போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண் மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
கையாற் எனத்தொடங்கும் தேவாரம்