Senthamil.Org

கையது

தேவாரம்

கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர் 
எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு 
மெய்திகழ் கோவணம் புஜண்ப துடுப்பது மேதகைய 
கொய்தலர் புஜம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.
கையது வீழினுங் கழிவுறினுஞ் 
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் 
கொய்யணி நறுமலர் குலாயசென்னி 
மையணி மிடறுடை மறையவனே 
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் 
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
கையது காலெரி நாகங் 
கனல்விடு சூலமது 
வெய்யது வேலைநஞ் சுண்ட 
விரிசடை விண்ணவர்கோன் 
செய்யினில் நீல மணங்கம 
ழுந்திரு வேதிகுடி 
ஐயனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே.
கையது கபாலங் காடுறை வாழ்க்கை 
கட்டங்கம் ஏந்திய கையர் 
மெய்யது புரிநுல் மிளிரும்புன் சடைமேல் 
வெண்டிங்கள் சூடிய விகிர்தர் 
பையர வல்குற் பாவைய ராடும் 
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் 
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில் 
இவரலா தில்லையோ பிரானார்.
கையது எனத்தொடங்கும் தேவாரம்