Senthamil.Org

கேட்டிலேன்

தேவாரம்

கேட்டிலேன் கிளைபி ரியேன் 
கேட்குமா கேட்டி யாகில் 
நாட்டினேன் நின்றன் பாதம் 
நடுப்பட நெஞ்சி னுள்ளே 
மாட்டினீர் வாளை பாயு 
மல்குசிற் றம்ப லத்தே 
கூட்டமாங் குவிமு லையாள் 
கூடநீ யாடு மாறே.
கேட்டிலேன் எனத்தொடங்கும் தேவாரம்