Senthamil.Org

கூழையே

தேவாரம்

கூழையே னாக மாட்டேன் 
கொடுவினைக் குழியில் வீழ்ந்து 
ஏழினின் னிசையி னாலும் 
இறைவனை யேத்த மாட்டேன் 
மாழையொண் கண்ணின் நல்ல 
மடந்தைமார் தமக்கும் பொல்லேன் 
ஏழையே னாகி நாளு 
மென்செய்வான் தோன்றி னேனே.
கூழையே எனத்தொடங்கும் தேவாரம்