Senthamil.Org

கூற்றுவன்காண்

தேவாரம்

கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவுஜருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி 
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
கூற்றுவன்காண் எனத்தொடங்கும் தேவாரம்