Senthamil.Org

கூற்றவன்காண்

தேவாரம்

கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண் குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண் நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண் இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
கூற்றவன்காண் எனத்தொடங்கும் தேவாரம்