Senthamil.Org

கூரிருள்

தேவாரம்

கூரிருள் கிழிய நின்ற 
கொடுமழுக் கையில் வைத்தார் 
பேரிருள் கழிய மல்கு 
பிறைபுனற் சடையுள் வைத்தார் 
ஆரிருள் அண்டம் வைத்தார் 
அறுவகைச் சமயம் வைத்தார் 
காரிருள் கண்டம் வைத்தார் 
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
கூரிருள் எனத்தொடங்கும் தேவாரம்