Senthamil.Org

கூரரவத்

தேவாரம்

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை 
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத் 
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவத் தண்கழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.
கூரரவத் எனத்தொடங்கும் தேவாரம்