Senthamil.Org

கூடிய

தேவாரம்

கூடிய இலயம் சதிபிழை யாமைக் 
 கொடியிடை உமையவள் காண 
ஆடிய அழகா அருமறைப் பொருளே 
 அங்கணா எங்குற்றா யென்று 
தேடிய வானோர் சேர்திரு முல்லை 
 வாயிலாய் திருப்புகழ் விருப்பால் 
பாடிய அடியேன் படுதுயர் களையாய் 
 பாசுப தாபரஞ் சுடரே.
கூடிய எனத்தொடங்கும் தேவாரம்