Senthamil.Org

கூடிக்

தேவாரம்

கூடிக் கூடித் தொண்டர் தங்கள் 
கொண்ட பாணி குறைப டாமே 
ஆடிப் பாடி அழுது நெக்கங் 
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர் 
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ் 
சித்தம் என்பால் வைக்க மாட்டீர் 
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் 
ஓண காந்தன் றளியு ளீரே.
கூடிக் எனத்தொடங்கும் தேவாரம்