Senthamil.Org

குழைத்துவந்

தேவாரம்

குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே 
குற்றேவல் நாடொறுஞ் செய்வான் 
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும் 
எம்பெரு மானென்றெப் போதும் 
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் 
தடிகள்தாம் யாதுசொன் னாலும் 
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில் 
இவரலா தில்லையோ பிரானார்.
குழைத்துவந் எனத்தொடங்கும் தேவாரம்