Senthamil.Org

குழலோடு

தேவாரம்

குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
குறட்புஜதம் முன்பாடத் தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
குழலோடு எனத்தொடங்கும் தேவாரம்