Senthamil.Org

குலவெஞ்சிலையால்

தேவாரம்

குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல் 
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி 
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப் 
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.
குலவெஞ்சிலையால் எனத்தொடங்கும் தேவாரம்