Senthamil.Org

குலவு

தேவாரம்

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னான்அடி யுள்க நல்குமே.
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் 
குழாம்பல குளிர்பொய்கை 
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் 
புஜவைசே ருங்கூந்தல் 
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் 
துறையுங்கற் பகத்தைச்சீர் 
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை 
நிற்ககில் லாதானே.
குலவு எனத்தொடங்கும் தேவாரம்