Senthamil.Org

குலம்பலம்

தேவாரம்

குலம்பலம் பாவரு குண்டர்முன் 
னேநமக் குண்டுகொலோ 
அலம்பலம் பாவரு தண்புனல் 
ஆரூர் அவிர்சடையான் 
சிலம்பலம் பாவரு சேவடி 
யான்றிரு மூலத்தானம் 
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் 
தொண்டராம் புண்ணியமே.
குலம்பலம் எனத்தொடங்கும் தேவாரம்