Senthamil.Org

குலமலர்

தேவாரம்

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் 
எதிர்கூடி நேடி நினைவுற் 
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த 
பெரியா னிலங்கு சடையன் 
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச 
வருமைத் திகழ்ந்த பொழிலின் 
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி 
நறையூரின் நம்ப னவனே.
குலமலர் எனத்தொடங்கும் தேவாரம்