Senthamil.Org

குற்றந்

தேவாரம்

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
 கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக் 
கற்றி லேன்கலை கள்பல ஞானங் 
 கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் 
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன் 
 பாவி யேன்பல பாவங்கள் செய்தேன் 
எற்று ளேன்எனக் குய்வகை அருளாய் 
 இடைம ருதுறை எந்தைபி ரானே.
குற்றந் எனத்தொடங்கும் தேவாரம்