Senthamil.Org

குரும்பைமுலை

தேவாரம்

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு 
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து 
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த 
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவுஜர் வினவில் 
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட 
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின் 
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் 
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.
குரும்பைமுலை எனத்தொடங்கும் தேவாரம்