Senthamil.Org

குருகாம்

தேவாரம்

குருகாம் வயிரமாங் கூறு நாளாங் 
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் 
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் 
கண்ணாங் கருகாவுஜ ரெந்தை தானே.
குருகாம் எனத்தொடங்கும் தேவாரம்