Senthamil.Org

குனிவினிய

தேவாரம்

குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக் 
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப் 
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப் 
பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத் 
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார் 
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே 
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக் 
கானாட்டு முள்@ரிற் கண்டுதொழு தேனே.
குனிவினிய எனத்தொடங்கும் தேவாரம்