Senthamil.Org

குண்டானாய்த்

தேவாரம்

குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார் 
நகைகாணா துழிதர் வேனைப் 
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற் 
றெளித்துத்தன் பாதங் காட்டித் 
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவல் 
அருள்செய்யும் ஆரூ ரரைப் 
பண்டெலாம் அறியாதே பனிநீராற் 
பரவைசெயப் பாவித் தேனே.
குண்டானாய்த் எனத்தொடங்கும் தேவாரம்