Senthamil.Org

குண்டாடியுஞ்

தேவாரம்

குண்டாடியுஞ் சமணாடியுங் 
 குற்றுடுக்கையர் தாமுங் 
கண்டார்கண்ட காரணம்மவை 
 கருதாதுகை தொழுமின் 
எண்டோ ளினன் முக்கண்ணினன் 
 ஏழிசையினன் அறுகால் 
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு 
 மணிநீர்மறைக் காடே.
குண்டாடியுஞ் எனத்தொடங்கும் தேவாரம்