Senthamil.Org

குண்டர்சாக்

தேவாரம்

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் 
குற்றுவிட் டுடுக்கையர் தாமுங் 
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் 
கையர்தாம் உள்ளவா றறியார் 
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க 
வாரணம் உரிசெய்து போர்த்தார் 
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் 
பாம்புர நன்னக ராரே.
குண்டர்சாக் எனத்தொடங்கும் தேவாரம்