Senthamil.Org

குண்டனாய்ச்

தேவாரம்

குண்டனாய்ச் சமண ரோடே 
கூடிநான் கொண்ட மாலைத் 
துண்டனே சுடர்கொள் சோதீ 
தூநெறி யாகி நின்ற 
அண்டனே அமரர் ஏறே 
திருவையா றமர்ந்த தேனே 
தொண்டனேன் தொழுதுன் பாதஞ் 
சொல்லிநான் திரிகின் றேனே.
குண்டனாய்ச் எனத்தொடங்கும் தேவாரம்