Senthamil.Org

குணங்கள்

தேவாரம்

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் 
குரைகழ லடிசேரக் 
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் 
கருத்தறிந் தவர்மேய 
மணங்கொள் புஜம்பொழில் அரிசிலின் வடகரை 
வருபுனல் மாகாளம் 
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை 
வல்வினை அடையாவே.
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் 
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார் 
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் 
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.
குணங்கள் எனத்தொடங்கும் தேவாரம்